அமைதியாக நிறைவு பெற்றது இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு

SHARE

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2020 க்கான வாக்கு பதிவு இன்று அமைதியாக நிறைவு பெற்றது.

ஏற்கனவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு தேர்தல் நடைபெறுவது இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவே முதன் முறை.

மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்த இந்த தேர்தலில் ராஜபக்சே தலைமையிலான மொட்டு கட்சி வெற்றி பெறும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அவரை எதிர்த்து கூட்டணி அமைத்துப் போட்டியிடும் சஜித் பிரேமதாசா அணி 92 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என தெரியவந்துள்ளது இதில் சஜித் பிரேமதாச கூட்டணியில் உள்ள சில இஸ்லாமிய கட்சியை சேர்ந்தவர்கள் தாங்கள் வெற்றி பெற்றால் ராஜபக்சே அணியுடன் இணைந்து விட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்கள் பகுதியை பொருத்தவரை தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒன்பதிலிருந்து 11 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் இரண்டு அல்லது மூன்று இடங்களை கைப்பற்றுவார் என தெரிகிறது

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாடு முழுவதும் மிக அமைதியாக நடைபெற்றது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை .வடகிழக்கு தமிழர் பகுதியில் வாக்குப்பதிவு எண்ணிக்கை கடந்த தேர்தலைவிட அதிகரித்துள்ளது இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது இதில் சுமார் 70 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒப்பிடும்போது வடகிழக்கு தமிழர் பகுதியை உள்ளடக்கிய பல தேர்தல் மாவட்டங்களில் வாக்குப்பதிவு எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

மீண்டும் ராஜபக்சே ஆட்சியமைப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்ட நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைபாடு என்ன என்பது தான் புரியத புதிராக இருக்கிறது.


SHARE

Related posts

Leave a Comment