அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நிறைவு. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

SHARE

இன்று நண்பகல் 12.44 மணிக்கு மோதி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டினார்.

அங்கே திரண்டிருந்த மக்கள் ஹர ஹர மகாதேவ் மற்றும் ஜெய் ஸ்ரீராம் என கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,பல நூற்றாண்டுகளாக கோயில் கட்டுவதும், இடிப்பதுமாக இருந்த சுழற்சி ராமஜென்ம பூமியில் இன்றுடன் முடிகிறது,” என்றார்.

இந்த கோயில் கட்டுவதன் மூலம், புதிய வரலாறு படைக்கப்படவில்லை, வரலாறு மீண்டும் திரும்புகிறது,என மோடி குறிப்பிட்டார். ஒரு படகோட்டி, ஒரு பழங்குடி ராமருக்கு உதவியது போல, ஒரு குழந்தை கிருஷ்ணருக்குக் கோவர்த்தன மலையைத் தூக்க உதவியது போல, நம் அனைவரின் கூட்டு முயற்சியால் இந்த கோயில் கட்டி முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதற்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோதிக்கு நன்றி தெரிவித்தார்.

“500 ஆண்டு கால போராட்டம், ஜனநாயக வழியிலும், அரசமைப்புக்கு உட்பட்டும் முடிவுக்கு வந்திருக்கிறது,” என ஆதித்யநாத் தெரிவித்தார்.

ராம் துரோகிகள்

இதனிடையே,ராமர் கோயிலுக்கான பூமி பூஜை சமயத்தில் யாரெல்லாம் கவ சேவகர்களின் தியாகத்தை மறந்தார்களோ அவர்கள் எல்லாம் ராம் துரோகிகள் என சிவசேனை கட்சி விமர்சித்துள்ளது.

மேலும், கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் பழைய நேர்காணல் ஒன்றை பகிர்ந்துள்ளது சிவ சேனை .

அதில் பால் தாக்கரே, “பாப்ரி மசூதி இடிக்கப்பட்ட பின் , அங்கு சிவ சேனை கொடியை நடுவது தங்களுக்குப் பெருமை,” என கூறி உள்ளார்


SHARE

Related posts

Leave a Comment