இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பு-கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறல்.

SHARE

இதுவரை இல்லாத அளவாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 77 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் நாடுகளின் பட்டியலில் முதலிடம் வகிப்பது அமெரிக்கா. வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது. 
தற்போது, கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.   4.2 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 2 லட்சத்து 77 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.04 கோடியை தாண்டியுள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து  50 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.  


SHARE

Related posts

Leave a Comment