இலங்கையின் பிரதமராக 4வது முறையாக மகிந்த ராஜபக்சே இன்று பதவியேற்றுக்கொண்டார்.
கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற, ராஜம்பா விஹாராய என அழைக்கப்படும் புத்தர் கோவிலில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், இலங்கை பிரதமராக, மஹிந்த ராஜபக்சே, இன்று பதவியேற்றுக்கொண்டார். இலங்கை அதிபரும், அவரது சகோதரருமான கோத்தபயா ராஜபக்சே, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மகிந்த ராஜபக்சே, இலங்கை பிரதமராக பதவியேற்பது, இது, நான்காவது முறையாகும். புதிய நாடாளுமன்றத்தின் கூட்டம் வருகிற 20ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர்கள் இரண்டொரு நாட்களில் பதவி ஏற்பார்கள் என தெரிகிறது.
தமிழர்களை பொறுத்த வரை மலையத்தில் சமீபத்தில் மறைந்த ஆறுமுக தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் மற்றும் வடக்கில் மூத்த அரசியல் வாதியும் ராஜபக்சேவின் தீவிர ஆதரவாளருமான டக்லஸ் தேவானந்தா ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.