கங்குலிக்கு நேர்ந்த கதி- அதானி குழும ஆயில் விளம்பரம் நிறுத்தம்.

SHARE

பிரபல கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலிக்கு, லேசான மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அதானி வில்மார் நிறுவனம், அவர் தோன்றும் பார்ச்சூன் எண்ணெய் விளம்பரங்களை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு, கடந்த, 2ம் தேதியன்று லேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர், கோல்கட்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. விரைவில் அவர் வீடு திரும்ப இருக்கிறார்.

இந்நிலையில், அவர் தோன்றிய, பார்ச்சூன் ரைஸ் பிரான் சமையல் எண்ணெய் விளம்பரங்கள், சமூக ஊடகங்களில் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாயின.பார்ச்சூன் எண்ணெய் இதயத்திற்கு ஆரோக்கியமானது என்று கூறுவதாக அமைந்திருக்கும் அந்த விளம்பரத்தில், கங்குலி நடித்திருந்தார். இதுவே, சமூக ஊடகங்களின் விமர்சனத்துக்கு காரணமாக அமைந்தது.


பார்ச்சூன் ரைஸ் பிரான் சமையல் எண்ணெய்க்கான விளம்பர துாதராக, கடந்த ஆண்டு ஜனவரியில், கங்குலி நியமிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக அவரை வைத்து விளம்பரங்கள் எடுக்கப்பட்டு, வெளியிடப்பட்டு வந்தன. தற்போது விளம்பரங்கள் நிறுத்தப் பட்ட நிலையில், அதற்கு ஆதரவாகவும், நிறுவனத்தின் நடவடிக்கையை விமர்சித்தும் சமூக ஊடகங்களில் கருத்துகள் வேகமாக பரவி வருகின்றன.


SHARE

Related posts

Leave a Comment