கொரோனா தடுப்பு மருந்து வெற்றி-ரஷ்யா அறிவிப்பு

SHARE

உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் தற்போது உலகம் முழுவதும் 1.28 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5.68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.பிரிட்டன்,இந்தியா அமெரிக்கா,உள்ளிட்ட நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் தனது கண்டுபிடிப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்திகடந்த 10 நாட்களுக்கு முன்பு சோதனையை துவங்கியது.

ஆனால் ரஷ்யா கடந்த மாதமே மனிதர்களிடம் தனது சோதனையை துவங்கிவிட்ட நிலையில் தற்போது சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும் ரஷ்ய தடுப்பு மருந்து தான் உலகின் முதல் தடுப்பு மருந்தாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

இந்த தகவலை இன்ஸ்டிடியூட் ஃபார் ட்ரான்ஸ்லேஸ்னல் மெடிசன் அண்ட் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநர் வாடிம் டாரசோவ் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அதிகார பூர்வ செய்தி நிறுவனம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

இந்த மருந்து அடுத்த மாதம் சந்தைக்கு வரும் என தெரிகிறது.அதே நேரம் இந்திய மருந்தும் வரும் ஆகஸ்ட் மாதம் சந்தைக்கு வர அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


SHARE

Related posts

Leave a Comment