பெர்மிட் உள்ள தொழிலாளர்கள் கொரோனா பரிசோதனைக்கு பின் பணிகளை செய்யலாம் என மலேசிய சிறப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக முடங்சியுள்ளது மலேசியா. அங்கு கொரோனா தொற்றுக்கு இது வரை 8737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.122 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக நோய் பாதிப்பிற்கு உள்ளாவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து பெர்மிட் உள்ள தொழிலாளர்கள் கொரோனா பரிசோதனை செய்து விட்டு பணிகளை மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. அதே போல உணவங்கள் நடத்துபவர்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகை கையுரைகளை பயண்படுத்தி உணவு சேவை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சுய சேவை உணவகங்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இயங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

previous post