நேராக கட்சி அலுவலகம் வந்து கட்சியை கைப்பற்றி விடுவார் என்ற அச்சத்தில்,அதிமுக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரம் தனிமை முடிந்து, சசிகலா பெங்களூருவில் இருந்து நாளை புறப்பட்டு சென்னை திரும்புகிறார். சசிகலாவுக்கு தமிழக-கர்நாடகா எல்லையில் இருந்து வழிநெடுக வரவேற்பு அளிக்கப்படும் என்று அ.ம.மு.க. பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். அதன்படி சென்னையில் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பும் சசிகலா, தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தனது அண்ணண் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் சசிகலா தங்க உள்ளதாகவும் அவர் தங்குவதற்காக அந்த வீட்டில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தியாகராய நகரில் உள்ள வீட்டில், கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்திப்பதற்காக வீட்டின் முகப்பு வாயிலில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் கலவரத்தை உருவாக்க சசிகலா சதித் திட்டம் தீட்டியிருப்பதாக போலீஸ் டி.ஜி.பி.யிடம் அமைச்சர்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், சசிகலா நாளை சென்னை வருகையையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.