‘ஜிரோதா’ நிர்வாகிகளின் சம்பளம் தலா ரூ.100 கோடி!

SHARE

கடந்த 2010ம் ஆண்டு, நிதின் காமத் மற்றும் நிகில் காமத் சகோதரர்களால் துவங்கப்பட்ட பங்குச் சந்தை தரகு நிறுவனம் தான் ஜிரோதா. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் இந்திய பங்குச் சந்தை உலகில் புரட்சியையே ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

பெரிய தரகு நிறுவனங்கள் பிரமாண்டமான அலுவலக கிளைகளை ஏற்படுத்தி, வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்ட தரகு கட்டணத்தையும் (Brokerage Charges) வசூலித்து வருகின்றன. இந்த நிலையில், ஜிரோதா நிறுவனம் இணையம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தரகு கட்டணத்தில் சலுகையை கொண்டு வந்தது. தரகு கட்டணத்தில் சலுகைகள் மட்டுமின்றி, டெலிவரி எனப்படும், பங்குகளை இன்று வாங்கி மற்றொரு நாளில் விற்கும் பரிவர்தனைகளுக்கு எந்தவொரு தரகு கட்டணத்தையும் பெறுவதில்லை (Zero Brokerage). இதனால், இந்நிறுவனம் நாளொன்றுக்கு 20 லட்சம் வர்த்தக பரிவர்த்தனைகளும் அதன் வர்த்தக மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயையும் தாண்டியது. இதனால் சிறந்த தரகு நிறுவனத்திற்கான விருதை பங்குச்சந்தை அமைப்பிடம் கடந்த ஆண்டு பெற்றது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கும் இந்நிறுவனம் தற்போது, ஆண்டுக்கு ரூ.442 கோடி லாபம் ஈட்டுகிறது. இதனால், இந்நிறுவனத்தை நிர்வாகிகள் நிதின், நிகில் ஆகியோருக்கும், நிதினின் மனைவியும் நிறுவனத்தின் இயக்குநருமான சீமா பாட்டிலுக்கும் ஆண்டுதோறும் தலா ரூ.100 கோடி வரை சம்பளம் நிர்ணியத்து, நிறுவனத்தின் நிர்வாகக் குழு தீர்மானம் இயற்றியுள்ளது.

இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரியின் வருடாந்திர ஊதியமான ரூ.49.89 கோடியைவிட, இவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் தொகை பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE

Related posts

Leave a Comment