டெல்லியில் வரலாறு காணாத குளிர் – விவசாயிகள் போராட்டத்திற்கு நெருக்கடி

SHARE

டில்லியில் கடந்த 1949ம் ஆண்டிற்குப் பிறகு இந்த ஆண்டு நவம்பரில் தான் கடுமையான குளிர் நிலவி வருகிறது, இந்த ஆண்டு குறைந்தபட்ச வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸ் ஆக காணப்பட்டது என இந்திய வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.


.டில்லியின் ஒவ்வொரு வருடமும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் கடும் குளிர் இருக்கும் என்றாலும் இந்த அளவுக்கு குறைவான வெப்பநிலை இருந்தது இல்லை என்றும் 71 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் டில்லியில் கடுமையான குளிர் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்த குளிர் காரணமாக டில்லியில் தற்போது இரவு பகலாக விவசாயிகள் வேளாண் மசோதாவுக்கு எதிராக போராடி வரும் போராட்டம் பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் குளிர் பிரதேசமான பஞ்சாப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு குளிர ஒன்றும் புதிதல்ல எனவே போராட்டம் தொய்வில்லாமல் தொடரும் எனவும் தெரிகிறது.


SHARE

Related posts

Leave a Comment