முதல் கூட்டம் – முதல் எச்சரிக்கை. மீண்டும் தலை தூக்கப்போகும் மீனவர் பிரச்சனை

SHARE

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்ற பின்னர் முதல் நாடாளுமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது.  கூட்டத்தில் துவக்க உரையாற்றிய அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் தொழில் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

. வெளிநாடுகளை சேர்ந்தவர்கள், உரிய அனுமதி இல்லாமல் இலங்கை கடற்பகுதிக்குள் மீன் பிடிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தமிழக மீனவர்களுக்கான கடும் எச்சரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக மீனவ பிரச்சனை சற்று ஓய்ந்திருக்கும் நேரத்தில்,புதிய அரசாங்கம் மீண்டும் இந்த பிரச்சனையை கிளப்பினால் தேர்தல் நேரத்தில் தமிழகத்தின் பிரதான பிரச்சனையாக இது மாற வாய்ப்பிருக்கிறது.


SHARE

Related posts

Leave a Comment