இந்திய ரஷ்ய கூட்டு தயாரிப்பு சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரமோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்துபார்க்கப்பட்டது.
அரபிக்கடலில், கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் இருந்து சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரமோஸ் ஏவுகணை ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. தற்போது நகரும் வாகனத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அந்த ஏவுகணை சோதனை முழுமையாக வெற்றி பெற்றிருப்பதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. நகரும் வாகனத்தில் இருந்து செலுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை 300 கி.மீ தொலைவில் இருந்த குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது