கொரோனா-நாடு முழுவதும்18,006 டன் மருத்துவக் கழிவுகள் உற்பத்தி

SHARE

உமாபதிகிருஷ்ணன்

இந்தியாவில் ஜூன் முதல் செப்.,வரையான 4 மாதங்களில் சுமார் 18,006 டன் மருத்துவக் கழிவுகள் உற்பத்தியாகியிருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (CPCB ) தெரிவித்துள்ளது. இவற்றில் அதிகபட்சமாக மஹாராஷ்டிரா 3,587டன் கழிவுகள் உருவாகியுள்ளன . அதனை தொடர்ந்து தமிழ்நாடு 1,737 டன் கழிவுகளை உருவாக்கியது. இதில் அதிகபட்சமாக கடந்த செப்., மாதத்தில் நாடு முழுவதும் சுமார் 5,500 டன் COVID-19 கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டன. இதுவரையான கழிவுகளில் இது அதிகபட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து ஜூன் முதல் 18,006 டன் கொரோனா மருத்துவ கழிவுகளை உற்பத்தி செய்துள்ளன. அவை 198 பொதுவான உயிரியல் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களால் (CBWTF ) சேகரிக்கப்படும். பின்பு சுத்திகரிக்கப்பட்டு அகற்றப் படுகின்றன. கொரோனா தொடர்பான மருத்துவ கழிவுகள் என்பது, பிபிஇ கிட்ஸ்கள், மாஸ்க்குள், கையுறைகள், ஷூ கவர், பாதுகாப்பு உடைகள், இரத்தம் படிந்த பொருட்கள், பஞ்சுகள், மனித திசுக்கள், இரத்த பைகள், ஊசிகள், மருத்துகள் மற்றும் மாத்திரகைள் ஆகியவை அடங்கும்.

இந்த கணக்கு ஒரு புறம் இருந்தாலும் கணக்கில் வராத வகையில் 5 ஆயிரம் டன் ளவிலான கழிவுகள் சிதறிகிடக்க வாய்ப்புள்ளதாக மற்றொரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

சூரிய ஒளி சில நிமிடங்களில் கொரோனா வைரஸ் கிருமியை கொன்றுவிடும் என்பதால் இந்த கழிகளால் ஏற்படும் நோய் பரவல் பெருமளவில் தவிர்க்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவிட் காலகட்டத்தில் தான் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மருத்துவ கழிவுகள் உருவாகியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது


SHARE

Related posts

Leave a Comment