UmapathyKrshnan
கடந்த சில நாட்களுக்கு முன் ICMR என்ற Indian Council of Medical Research வலை தளத்தில் பெங்களுருவை சேர்ந்த Mi LABS நிறுவனம் தயாரித்த Myvir ஆயுர் வேத மாத்திரை குறித்து பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இந்த மாத்திரை கோவிட் தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதாக குறிப்புகள் காணப்பட்டன.
கடந்த 2020 ஜனவரிமாதம், சீனாவின் ஊகான் மாகாணத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது முதல், உலகமே முடங்கிபோனது.
வளர்ந்த நாடுகள் கூட செய்வதறியாது திகைத்தன. பல்வேறு நாடுகள் இந்த தொற்றை கட்டுப்படுத்த மருந்து தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டன.
பெரும்பாலான நாடுகள் தடுப்பு மருந்து தயாரிப்பிலேயே கவனம் செலுத்தின.
உலக சுகாதார நிறுவனமும் தடுப்பூசி போடுவதால் மட்டுமே கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என தெரிவித்தது.
ஆனால் சில மாதங்களில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்ஸ் என கொரோனா தொற்று கொடூரமாக பரவ, தொற்று துவங்கிய சீனாவில் தொற்று முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த காலகட்டத்தில் பல நாடுகள் தடுப்பூசி கண்டறிவதில் தீவிரம் காட்டின.
முதன் முதலாக ரஷ்யா ஸ்புட்னிக் V என்ற தடுப்பூசி மருந்தை களத்தில் இறக்கியது.
மாடர்னா,பைசர்,பாரத் பயோடெக் போன்ற நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்புகளை அடுத்தடுத்து களதில் இறக்கின.

அதே நேரம் பாரம்பர்ய மருத்துவ பலம் கொண்ட இந்தியா,சீனா,போன்ற நாடுகளில் உள்ள மருத்துவர்கள் கொரோனா நோய் வந்தால் சரி செய்யும் மருந்துகளை கண்டறியும் ஆய்வில் இறங்கினர்.
சித்தா,ஆயுர்வேதா,போன்ற பாரம்பர்ய மருத்துவத்தில் கைதேர்ந்தவர்களை கொண்டு கொரோனாவுக்கு மருந்து கண்டறியும் ஆய்வில் பல இந்திய நிறுவனங்கள் ஈடுபட்டன.
இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு வைரஸ் தொற்றைகட்டுப்படுத்தும் விதமாகதயாரிக்கப்பட்ட மைவிர் மாத்திரைகளை தயாரித்து அங்கீகாரம் பெற்ற மை லேப்ஸ் நிறுவனம், தங்களின் தயாரிப்பான இந்த மாத்திரைகளை கொரோனா நோய் தடுப்பிற்கு பயன்படுத்த முடியுமா? என்ற ஆய்வில் இறங்கியது.
இதற்காக பெங்களூருவில் உள்ள சர்வதேச புகழ்பெற்ற பெங்களூரு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையமான BMCRI யை அனுகியது.
BMCRI நிறுவனத்தின் டீன் மருத்துவர் சி.ஆர் ஜெயந்தி இந்த ஆய்வுக்கு அனுமதித்ததை தொடர்ந்து 42 கோவிட் நோயாளிகளை கொண்டு ஆய்வு மோற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் 21 பேருக்கு ஆங்கில மருந்து மட்டும் கொடுக்கப்பட்டது.21பேருக்கு ஆங்கில மருந்துடன் மைவீர் மாத்திரைகள் கொடுக்கப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் மைவீர் மாத்திரைகள் பக்கவிளைவில்லாமல் நோயை குணப்படுத்த உதவியது தெரியவந்தது.
முழுக்க முழுக்க பக்கவிளைவற்ற மஞ்சள்,வேம்பு,துளசி,பப்பாளி இலை,கோரைகிழங்கு போன்ற மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த மைவீர் மாத்திரைகள்,நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியது.
அத்துடன், கொரோனா நோயிலிருந்து மீண்ட பின்னர் ஏற்படும் தொற்றுகளில் இருந்தும் , இந்த மாத்திரைகளை உட்கொண்டவர்கள் பலன் பெற்றுள்ளது, இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து இந்த மைவீர் மாத்திரைகளை மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு பரிந்துரைக்க துவங்கியுள்ளனர்.
தற்போது பிரபலமடைய துவங்கியுள்ள இந்த மாத்திரை குறித்து Mi LABS நிறுவனத்தின் தலைவர் திரு,SPT.லட்சுமண பெருமாள் நியூஸ் ஏசியா லைவுக்கு அளித்த நேர்காணலில், இந்த மாத்திரை முழுக்க முழுக்க நம் முன்னோர்கள் காலம் காலமாக பயன்படுத்திய மூலிகை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது என தெரிவித்தார்.

இந்த மூலிகை கலவை மாத்திரைகளை ஆய்வுக்கு உட்படுத்தி பின்னர் பயன்பாட்டிற்கு விட்டுள்ளதாகவும் அவர் நம்மிடம் கூறினார்.
பெங்களூருவில் இயங்கிவரும் இந்த மை லேப்ஸ் நிறுவனம் டெங்கு காய்சலை கட்டுப்படுத்தும் ZYBORICA என்ற மருந்தை அறிமுகப்படுத்தி பிரபலமானது குறிப்பிடத்தக்கது .