கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 7 ஆயிரத்து 445 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,அந்த மாநில மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. கடந்த 5 மாதங்களுக்கு மேலாக 100,200 என இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை மி அதிக அளவாக உயர்ந்து வருகிறது.கேரளாவில் ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பு ஏற்படுவது இதுதான் முதல் முறையாகும். கேரளாவில், 2 வது நாளாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 384 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 3,391 பேர் குணம் அடைந்துள்ளனர்.இருருந்த போதும் நாட்டிலேயே இரண்டாவது அதிகபட்சமான நோய் பாதிப்பு இங்கு பதிவாகியிருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் 956 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.