கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடி படம் – நீதிமன்றம் நோட்டீஸ்

SHARE

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இருப்பதை எதிர்த்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க, கேரள உயர் நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த குடிமகன் பீட்டர் மயிலிபரம்பில் இரு ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார். அதற்கான சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதை எதிர்த்து கொச்சி உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், ‘நான் பணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொண்டேன். அதற்கான சான்றிதழில் என் தனிப்பட்ட விபரங்கள் மட்டுமே இருக்கலாம். பிரதமர் மோடியின் புகைப்படம் இருப்பது தனிநபரின் உரிமைகளுக்குள் தலையிடுவதாக உள்ளது’ எனக் கூறி உள்ளார்.

மனுவை நேற்று விசாரித்த நீதிபதி என்.நாகரேஷ்,இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் எனக் கூறி ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment