டெல்லியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் – அமித்ஷா நிபந்தனையை ஏற்க மறுப்பு

SHARE

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்த விவசாயிகள், ‘டெல்லி சலோ’ போராட்டத்தை 4 நாட்களாகத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.  
டெல்லியை நோக்கி படையெடுத்த விவசாயிகள் அரியானா எல்லையில் தடுத்த நிறுத்தப்பட்டு அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் தடுக்க போலீசார் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் போலீசாரின் தடுப்பை உடைத்து டெல்லிக்குள் விவசாயிகள் புகுந்தனர்.

பின்னர் டெல்லியின் புராரி மைதானத்தில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், விவசாயிகள், , சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் 4வது நாளாக இன்றும் தொடர்கிறது. போராட்ட இடத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

பேச்சுவார்த்தைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விதித்த நிபந்தனையை ஏற்க. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இது குறித்து விவசாய சங்க தலைவர் பி.கே.யு கிரந்திகாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், எந்தவொரு அரசியல் கட்சித் தலைவர்களையும் எங்கள் மேடையில் பேச அனுமதிக்க மாட்டோம் என்றார். அது காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சி அல்லது பிற கட்சிகளாக இருக்கலாம். எங்கள் குழு மற்றும எங்களை ஆதரிக்கும். விவசாயிகள் சங்கத்தினர் மற்றும பிற அமைப்புகள் எங்கள் விதிகளை பின்பற்றினால் பேச அனுமதிக்கப்படும்.  எங்களுக்கு தேவையான 4 மாத ரேஷன் பொருட்கள் கிடைத்துள்ளது, எனவே கவலைப்பட ஒன்றுமில்லை. எங்கள் செயல்பாட்டுக் குழு எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்றார்.



SHARE

Related posts

Leave a Comment