கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்தராமயைா சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி யை சந்தித்து முதல்வர் எடியூரப்பா மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொணடு வர உள்ளதாக நோட்டீஸ் கொடுத்துள்ளார் .
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமெனில் குறைந்த பட்சம் 23 எம்.எல்.ஏ.,க்களின் கையெழுத்து தேவை என்பதை சபாநாயகர் தெரிவிக்க, 23 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டுள்ளது என்று சித்தராமையா கூறினார். இதனையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சபாநாயகர் ஒப்புக் கொண்டார்.
இது குறித்து சித்தராமையா செய்தியாளர்ளிடம் பேசினார்அப்போது , அரசு அனைத்து விதத்திலும் தோல்வியுற்றது என்றும், ஊழல்மலிந்து விட்டதாகவும், , வளர்ச்சி பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதுடன் மாநிலத்தின் நிதி நிலை மோசமடைந்து வருவதால் மாநில மக்கள் அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் கூறினார்.
மேலும் எடியூரப்பாவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டிய சித்தராமையா ,மருத்துவ உபகரணங்கள், மடிக்கணினிகள், மானியங்களை வெளியிடுவது போன்றவற்றிலும் ஊழல் நடந்தேறி உள்ளது.எனவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்காக நாங்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளோம் …” என்று அவர் மேலும் கூறினார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவது குறித்து பா.ஜ.,வினர் கூறுகையில் காங்கிரஸ் கட்சியில் போதிய பலம் இல்லை. அக்கட்சியை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் எங்கள் பக்கம் வருவார்கள் என தெரியவில்லை. இது ஒரு அரசியல் வித்தை என கூறினர். காங்., எம்.எல்.ஏக்கள் பலர் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பர் என கூறினர்.
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான தேதியை அடுத்த ஒரிரு நாட்களில் சபாநாயகர் அறிவிப்பார் என எதிர்பார்க்ப்படுகிறது.