விரைவில் சந்தைக்கு வரும் பறக்கும் கார்

SHARE

பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘ஜெனரல் மோட்டார்’ நிறுவனம். ‘கெடிலாக்’ எனும் பறக்கும் காரை அறிமுகம் செய்துள்ளது.இந்த பறக்கும் கார், முழுவதும் தானியங்கி முறையில் இயங்கும்.

பாட்டரிகளில் இயங்கும் இந்த வாகனத்துக்கு, ரன்வே எதுவும் தேவைப்படாது.
இருக்கும் இடத்திலிருந்து அப்படியே மேலெழுந்து பறக்கும். அதேபோல் பறக்கும் நிலையிலிருந்து, அப்படியே கீழிறங்கி விட முடியும்.மணிக்கு, 55 மைல் வேகத்தில் இந்த காரால் பறக்க முடியும்.

ஆளில்லா பறக்கும் சிறு விமானமான, ‘ட்ரோன்’களைப் போலவே இதுவும் செயல்படுகிறது. நகரங்களுக்கு மிகவும் ஏற்ற வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, டொயோட்டோ மோட்டார், ஹூண்டாய் மோட்டார் போன்ற சில நிறுவனங்கள் பறக்கும் காருக்கான, கருத்துருவாக்கத்தை அறிமுகம் செய்துள்ளது

இதே போல ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று 2015ஆம் ஆண்டே பறக்கும் காரை தயரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது..ஆனால், ஜெனரல் மோட்டார்சின் பறக்கும் கார், விரைவில் சந்தைக்கு வந்துவிடும் என தெரிகிறது.


SHARE

Related posts

Leave a Comment