உணவுப் பொருள் தட்டுப்பாடா ?இலங்கை அரசு மறுப்பு

SHARE

இலங்கையில் உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.

இலங்கை இறக்குமதி வாயிலாக உணவுப் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.சுற்றுலா பயணியர் வாயிலாக கிடைக்கும் அன்னியச் செலாவணி பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா காரணமாக சுற்றுலா பயணியர் வருகை குறைந்து அன்னியச் செலாவணி வருவாய் சரிவடைந்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.6 சதவீதமாக குறைந்துள்ளது. டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு வெகுவாக வீழ்ச்சி அடைந்து உள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் உலகளவில் உணவு தானிய விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இலங்கையின் உணவுப் பொருட்களின் இறக்குமதி செலவினம் அதிகரித்து விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதையடுத்து இலங்கை அரசு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வினியோகத்தை ஒழுங்குபடுத்த, பொது பாதுகாப்புக்கான அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது.

இது குறித்து,செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அதிபர் மாளிகைசெய்தி தொடர்பாளர் கிங்ஸ்லி ரத்நாயகே. இலங்கையில் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக சில உள்நாடு மற்றும் வெளிநாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுஉள்ளன. இதை அரசு மறுக்கிறது. உணவுப் பொருட்கள் பதுக்கப்படுவதை தடுத்து விலைவாசியை குறைக்கும் நோக்கில் தான் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இதனால் அரசு நிர்ணயித்த நியாயமான விலையில் நெல், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.உணவுப் பொருட்கள் பதுக்குவது தடுக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகள் இலங்கை ராணுவத்தின் மேற்பார்வையில் நடந்துவருகிறது என்றார்..


SHARE

Related posts

Leave a Comment