வீட்டுச்சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் – விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தால் நடவடிக்கை.

SHARE

 டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி புகார் தெரிவித்துள்ளது. 

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக 13 நாட்களாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சந்தித்து பேசினார். போராடும் விவசாயிகளுக்கு அவர் ஆதரவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் ,அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி புகார் தெரிவித்துள்ளது. 
இது குறித்து ஆம் ஆத்மி கட்சி தனது டுவிட்டர் பதிவில்,
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் விவசாயிகள் போராட்டத்திற்கு நேரடியாக சென்று வந்த முதல் முதல்வர் வீட்டிற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை, அவர் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment