இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி,இந்தியர்களுக்கு பயண்படுத்த முதல்கட்ட அனுமதி

SHARE

இன்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
தடுப்பூசியை பொறுத்தமட்டில் இந்தியாவில் 6 தடுப்பூசிகள் பல்வேறு கட்ட சோதனையில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அவற்றில், உள்நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து உருவாக்கியுள்ள கோவேக்சின் தடுப்பூசி இறுதி கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. 
இந்தநிலையில், இந்த தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம், சீரம் நிறுவனமும் விண்ணப்பித்தது. இதையடுத்து நேற்று அந்த அமைப்பு பரிந்துரைத்தது.
இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசி மருந்தை கண்டறிந்துள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பு மருந்தினை நிபந்தனைகளுடன் அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்திட மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ), பரிந்துரை செய்துள்ளது.


SHARE

Related posts

Leave a Comment