நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற தலைவராக பிரசந்தா தேர்வு

SHARE

நேபாள நாட்டில் சீன ஆதரவு தலைவரை பதவியில் இருந்து இறக்கிவிட்டு இந்திய ஆதரவு தலைவரான பிரசந்தா கட்சி தலைவர் பதவியை கைப்பற்றினார்.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் பார்லிமென்ட் தலைவர் பதவியில் இருந்து பிரதமர் சர்மா ஒலி நீக்கப்பட்டார்.தலைவராக புஷ்ப கமல் பிரசந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நேபாளத்தில் 2018ல் ஒலி தலைமையிலான சி.பி.என்.யு.எம்.எல். மற்றும் முன்னாள் பிரதமரான புஷ்ப கமல் தாஹால் பிரசந்தா தலைமையிலான சி.பி.என். மாவோயிஸ்ட் மையம் இணைந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. பிரதமராக சர்மா ஒலி பதவியேற்றார். கட்சியின் தலைவராக சர்மா ஒலியும் கட்சியின் துணைத் தலைவராக பிரசந்தாவும் பதவி வகித்து வந்தனர். இருப்பினும் அவர்கள் இரு அணிகளாகவே செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இரு தரப்புக்கு இடையே மோதல் அதிகரித்தது.

சர்மா ஒலியின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பிரசந்தா கோஷ்டியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.கடந்த 20ம் தேதி பிரதமர் ஒலி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பார்லிமென்டை முன் கூட்டியே கலைக்க அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு பரிந்துரைக்கப் பட்டது. இதையேற்று பார்லி.யை உடனடியாக கலைத்து அதிபர் உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு ஏப். 30 மற்றும் மே 10ல் இரண்டு கட்டங்களாக பார்லிமென்டிற்கு தேர்தல் நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


இந்நிலையில் பார்லிமென்டை கலைக்கும் பிரதமர் ஒலியின் முடிவு நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் நேபாள கம்யூனிஸ்ட் உடைவதை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது.பிரதமர் சர்மா ஒலி தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சிக்கு 1199 உறுப்பினர்கள் அடங்கிய புதிய பொது குழு அமைக்கப்பட்டது. இதற்கு போட்டியாக பிரசந்தா தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சி தலைவர் பதவியிலிருந்து சர்மா ஒலி நீக்கப்பட்டு புதிய தலைவராக மாதவ் நேபாள் நியமிக்கப்பட்டார்.

மேலும் ஜனநாயத்துக்கு விரோதமாக பார்லி.யை கலைத்த சர்மா ஒலி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் பிரசந்தா தலைமையில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் பார்லிமென்ட் குழு கூட்டம் காத்மாண்டுவில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவர் பதவியிலிருந்து பிரதமர் சர்மா ஒலி நீக்கப்பட்டார். புதிய தலைவராக பிரசந்தா தேர்வு செய்யப்பட்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரசந்தா நாடாளுமன்ற. கலைப்பை ரத்து செய்து புதிய அரசு அமைப்பது தான் என் முதல் பணி. நாட்டில் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து நாடாளுமன்றத்தை செயல்பட வைப்பேன். என பிரசந்தா கூறினார்.

இதற்கிடையே பார்லிமென்டை பிரதமர் சர்மா ஒலி கலைத்ததை எதிர்த்து நேபாள உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சோழேந்திர ரானா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.பார்லிமென்ட் கலைப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த தலைமை நீதிபதி மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். மனுக்கள் மீது அரசியல்சாசன அமர்வு நாளை முதல் விசாரணை நடத்துகிறது. தேர்தல் ஆணையத்தை சந்தித்த பிரசந்தா கோஷ்டியினர் ‘நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் தங்கள் பிரிவுக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு உள்ளது. அதனால் தங்கள் பிரிவைத் தான் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியாக அங்கீகரிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்து உள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment