இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் புதுச்சேரிக்குஅடுத்த மாதம் முதல் கப்பல் போக்குவரத்து துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ..
இது தொடர்பாக அந்நாட்டின் துறைமுகம், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டி சில்வா கூறியதாக அந்நாட்டு நாளிதழில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது, அடுத்த மாதம் (2023 ஜன., மத்தியில்) முதல் காங்கேசன் துறைமுகம் முதல் புதுச்சேரி இடையே கப்பல் போக்குவரத்து துவக்க இந்தியா ஒப்பு கொண்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கப்பலில் செல்ல ஒரு நபருக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் 21 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கட்டணத்தில் 100 கிலோ வரை சரக்குகளை எடுத்து செல்ல முடியும் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read more at: