மனமுருகி மக்களிடம் மன்னிப்பு – “கிம் ஜாங் உன்” உருக்கம்

SHARE

 புயல் பாதிப்பு, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வரும் வடகொரிய மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வடகொரிய மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தில், இந்த கடுமையான காலத்தில் கூட ஆளும் கட்சிக்கு ஆதரவளித்த மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.புதிய ஆண்டிலும், எங்கள் மக்களின் லட்சியங்களும் விருப்பங்களும் நிறைவேறும், புதிய சகாப்தத்தை கொண்டுவருவதற்கு நான் கடுமையாக உழைப்பேன் என்று சபதமிட்டுள்ளார்.
மேலும் பொருளாதார முன்னேற்றம் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்காகவும், சர்வதேச தடைகள் மற்றும் கொரோனா வைரஸ் வெடிப்பைத் தடுக்கும் நோக்கில் கடுமையான நடவடிக்கைகளின் விளைவாக குடிமக்கள் தாங்கிக் கொள்ள முடியாத  துன்பங்களை அனுபவித்ததற்காகவும்  அதற்காக தாம்   மன்னிப்பு கோருவதாகவும் கிம் தனதுகடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment