போராட்டக்காரர்களை கொலை செய்வதன் மூலம் அவர்களை அமைதியாக்க முடியாது-வருண்காந்தி

SHARE

உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுடைய கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் வெளியிட்டிருந்தது. அதனை காங்., எம்.பி., ராகுல், பொதுச்செயலர் பிரியங்கா உள்ளிட்ட காங்., தலைவர்கள் பகிர்ந்து கார் மோதிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்த விவசாயிகளுக்கு நீதி கோரியும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பா.ஜ., எம்.பி.,யான வருண் காந்தி தெளிவான புதிய வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் பதிவிட்டதாவது: வீடியோ தெள்ளத் தெளிவாக உள்ளது. போராட்டக்காரர்களை கொலை செய்வதன் மூலம் அவர்களை அமைதியாக்க முடியாது. சிந்தப்பட்ட அப்பாவி விவசாயிகளின் ரத்தத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். வெளிப்பட்டுள்ள ஆணவம், கொடூரம் ஆகியவை விவசாயிகளின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குள் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment