புதிய நாடாளுமன்ற கட்டடம்-அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

SHARE

டெல்லியில் உள்ள தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.

அதில் போதிய இடவசதி இல்லை என கூறி வந்தது பாஜக அரசு. இதனை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய கட்டிடத்துக்கு அருகிலேயே புதிய கட்டிடம் எழுப்பப்படுகிறது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கட்டுமான பணிக்கு தடை விதித்தது. இருப்பினும், பூமி பூஜை நடத்தலாம் என்று அனுமதி அளித்தது.
அதன்படி, டெல்லியில் புதிதாக அமைய உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி இன்று  அடிக்கல் நாட்டினார் 

இந்நிகழ்சியில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், உள்ளிட்ட 200 பேர் பங்கேற்றுள்ளனர்.
ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படுகிறது. 2022-ம் ஆண்டுக்குள் கட்டுமான பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே ஆண்டில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதற்குள் புதிய நாடாளுமன்றம் தயாராகி விடும் என்று தெரிகிறது.
அதைத்தொடர்ந்து தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் தொல்லியல் சொத்தாக பராமரிக்கப்படும். நாடாளுமன்றம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்த பயன்படுத்தப்படும்.
டாடா நிறுவனம், புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளை மேற்கொள்கிறது. 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது இந்த புதிய கட்டடம். நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்ட அரசியல் சட்ட அரங்கம் மற்றும் எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் பகுதி, நூலகம், நிலைக்குழுக்களின் அறைகள், சாப்பிடும் பகுதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவை இடம்பெற்று இருக்கும்.
மக்களவையில் 888 இருக்கை வசதிகளும், மாநிலங்களவையில் 384 இருக்கை வசதிகளும் இருக்கும். நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தின்போது, மக்களவையில் 1,224 பேரை அமர வைப்பதற்கான வசதிகள் இடம்பெற்று இருக்கும்.


SHARE

Related posts

Leave a Comment