:இந்தியாவில். ‘ஆன்லைன்’ நிறுவனங்களின் பண்டிகை கால விற்பனை சூடுபிடித்துள்ளது.
கடந்த ஐந்து நாட் களில் மட்டும் 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தியர் கள் பொருட்களை வாங் கியுள்ளனர்.கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் வர்த்தகம் பெருமளவு பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த வாரம் பண்டிகை காலம் துவங்கியது. இதை யொட்டி ஆன்லைன் வர்த் தக நிறுவனங்கள் பலசலுகைகளை அறிவித்தன.கடந்த ஐந்து நாட்களில் இந்தியர்கள் 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்கியுள்ளனர்இதில்,’ஸ்மார்ட் போன்கள்’ விற்பனை தான் அதிகமாக இருந்துள்ளது.
பெரு நகரங்களில் மட்டுமல்லாது சிறு நகரங்களில் இருந்தும் ஆன்லைன் வழியாக மக்கள் பொருட்களை அதிகளவில் வாங்கியுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.