மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் 46வது நாளாக நீடித்து வருகிறது
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில்.
‘முதலாளிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதை விட்டுவிட்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவியுங்கள், இன்னும் நேரம் இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.
மேலும், 2015ல் மக்களவையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தான் பேசிய வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.