ராஜபக்சே வீட்டில் தமிழில் மந்திரங்கள் முழங்க கொலு

SHARE

இலங்கை பிரதமர் ராஜபக்சே, தனது குடும்பத்தினருடன்  நவராத்திரிவிழாவை, கொண்டாடினார்.

தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமரின் இல்லத்தில் கடந்த 21ம் தேதி நடந்த நவராத்திரி விழாவில், ராஜபக்சே, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கலந்து கொண்டனர். கொலு வைக்கப்பட்டு பாரம்பரிய பூஜை, வழிபாடுகள் நடந்தது.பிராமணர்கள் தமிழில் மந்திரங்கள் ஓதினர்.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,ஆறுமுக தொண்டமானின் மகனும் எம்.பியுமான ஜீவன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ராஜபக்சே ,இந்த நவராத்திரி தினத்தில் கொரோனா தொற்றை ஒழிக்க உறுதி ஏற்போம். அனைவரும் அனைத்து நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் என்றார், உங்கள் எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துகள் என தமிழில் கூறினார்.


SHARE

Related posts

Leave a Comment