அழுத்தம் அதிகம், என்றபோதும் உடல் நிலையில் முன்னேற்றம்- ரஜினி குறித்து அப்போலோ.

SHARE

ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையின் புதிய அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் ரஜினியின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ரஜினியின் ரத்த அழுத்தத்தில் நேற்றை விட முன்னேற்றம் இருந்தாலும் ரத்த அழுத்தம் சற்று அதிகமாகவே உள்ளது. ரஜினிகாந்தின் ரத்த அழுத்தத்தை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஓய்வு தேவை என்பதால் அவரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை.மருத்துவ பரிசோதனைகளில் கவலைப்படும் வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை. ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது என்று இன்று மாலை முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment