கட்சி பெயரை இன்று பதிவு செய்கிறார் ரஜினி – டெல்லி சென்றது அறிவுஜீவிகள் குழு.

SHARE

ரஜினி கட்சி பெயர், இன்று பதிவு செய்யப்பட உள்ளது. இதற்காக, வழக்கறிஞர்களுடன், மன்ற நிர்வாகிகள் மற்றும் அறிவு ஜீவிகள் குழு, டில்லி சென்றுள்ளது..

கொரோனாவால் முடங்கிய, ரஜினியின் அரசியல் பிரவேசம், தற்போது சூடுபிடித்து உள்ளது. சென்னையில் சில நாட்களாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன், அவர் ஆலோசித்து வந்தார்.

அப்போது கட்சிக்கு சில பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில் ஒன்றை, ரஜினி தேர்வு செய்துள்ளார். அந்த பெயரை, டில்லியில் உள்ள தேர்தல் கமிஷனில், இன்று பதிவு செய்ய உள்ளனர். இதற்காக, வழக்கறிஞர்களுடன், மன்ற நிர்வாகிகள் சிலர், டில்லி சென்றுள்ளனர். . கட்சி கொடியில், வெள்ளை நிறம் பிரதானமாக இருக்கும் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, கட்சி பெயரை அறிவித்த நாள் முதல், ஒவ்வொரு தெருவிலும், கட்சியின் பெயரை, மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல, வார்டு வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, தனி குழுக்களும் உருவாக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், பணம், பதவிக்காக இருப்பவர்களை நீக்க, ரஜினி முடிவெடுத்துள்ளார். அதற்கான பட்டியலும் தயாராக உள்ளது. அதனால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு, தற்போது போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு போலீசாருக்கு, தினமும் ரஜினி வீட்டில் இருந்தே, உணவு மற்றும் தேநீர் வழங்கப்படுகிறது.மேலும், யார் யார் வருகின்றனர் என்பதை கண்காணிக்க, கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஜெ., மறைவுக்கு பின் களையிழந்த போயஸ் கார்டன், தற்போது ரஜினியால், மீண்டும் பரபரப்பாகி உள்ளது.


SHARE

Related posts

Leave a Comment