கொலை செய்ய 55 ஆயிரம் மட்டும்- விலைப்பட்டியலுடன் கூலிப்படை விளம்பரம்

SHARE

இந்தியாவில் கொலை கொள்ளைக்கு பெயர் போன மாநிலம் உத்தரபிரதேசம். நிர்பயா கொடூர கொலை முதல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீஸ் அதிகாரிகளையே சுட்டுக்கொன்று நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய தாக்குதல் என கொடுரமாக செயல்களில் ஆடுபடுபவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்,

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் கூலிப்படை கும்பல் ஒன்று, மிரட்டல், காயப்படுத்துதல், கொலை செய்தல் போன்றவற்றிற்கு தனித்தனியாக விலைப்பட்டியலுடன் விளம்பரம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்தில், பிரச்னை என வருபவர்களிடம் மிரட்டுவதற்கு, கை-கால்களை உடைப்பதற்கு என தனித்தனியாக விலை நிர்ணயம் செய்துள்ளதாக கூறும் காட்சி இடம்பெற்றிருக்கும். அதேபோல் உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரை சேர்ந்த ஒரு கும்பல், விலைப்பட்டியலுடன் விளம்பரம் செய்துள்ளது. வாலிபர் ஒருவர் துப்பாக்கி பிடித்தப்படி ‘போஸ்’ கொடுப்பதுபோல் அமைந்திருக்கும் இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த விளம்பரத்தில் காயப்படுத்த 10 ஆயிரம், கொலைக்கு 55 ஆயிரம் சிறிய காயம ஏற்படுத்த 5000,மிரட்டல் விடுக்க 1000 என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணத்திற்காக குற்றச்செயல்களை செய்யும் கூலிப்படை கும்பல், மக்களை துன்புறுத்துவது முதல் அவர்களைக் கொல்வது வரையிலான குற்றங்களைச் செய்ய வசூலிக்கப்படும் விலைப்பட்டியலுடன் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.. மேலும் தொடர்பு கொள்ள டெலிபோன் எண்ணும் இடம்பெற்றிருந்தது.

சமூக வலைதளங்களில் வைரலான இந்த விளம்பரம் உத்தரபிரதேச போலீசாரின் கவனத்திற்கும் சென்றது.

இந்த விளம்பரத்தை பதிவேற்றிய இளைஞர்கள் அங்குள்ள சவுக்கடா கிராமத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.


SHARE

Related posts

Leave a Comment