சபரிமலை -நவம்பர் முதல் பக்தர்களுக்கு அனுமதி

SHARE

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நவம்பர் மாதத்தில் இருந்து விதிமுறைகளுடன் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.

ஓணம் பண்டிகை மற்றும் உத்ராடம், திருவோண சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. செப்.2 வரை பக்தர்கள் தரிசனமின்றி வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

நவ.16 ல் துவங்கும் மண்டல பூஜைக்காலம் முதல் சபரிமலையில் விதிமுறைகளுடன் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்திருப்பதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.


SHARE

Related posts

Leave a Comment