சவுதி அரேபிய விமான நிலையம் மீது டிரோன் தாக்குதல் – பதற்றம்

SHARE

ஏமன் நாட்டில் அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டு போர் காரணமாக ஏமனில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.    

உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையினான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது. 
இதனால், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. சவுதி அரேபியாவின் எல்லைக்குள் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. 
இந்நிலையில், சவுதி அரேபியாவின் ஜசன் நகரில் உள்ள கிங் அப்துல்லா சர்வதேச விமான நிலையத்தில் இன்று டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. ஏமன் நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள ஜசன் நகரின் விமான நிலம் மீது டிரோன் மூலம் வெடிகுண்டு வீசப்பட்டது. 
இதை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஏவுகணை தடுப்பு அமைப்பு நடுவானில் தடுத்து நிறுத்தி அழித்தது. ஆனால், சில குண்டுகள் விமான நிலையம் மீது விழுந்தன. இந்த தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 6 பேர் சவுதி அரேபியாவையும், 3 பேர் வங்காளதேசத்தையும், ஒருவர் சூடானையும் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிரோன் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று சவுதி அரேபிய அரசு ஊடகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.


SHARE

Related posts

Leave a Comment