சவுதி பெண்கள் உரிமை ஆர்வலர் லூஜெய்ன் அல்-ஹத்லூலுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை

SHARE

சவூதி அரேபியா வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் லூஜெய்ன் அல்-ஹத்லூல் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில்  ஈடுபட்டதாக கடந்த  2018 மே மாதம் கைது செய்யப்பட்டார்.
ரியாத்தின் குற்றவியல் நீதிமன்றத்தில்  இது குறித்த விசாரணை நடைபெற்றது.  வழக்கு பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது
ஹத்லூலிக்கு பயங்கரவாத எதிர்ப்பு  நீதிமன்றத்தால்  தண்டனை அறிவிக்கப்பட்டது. அவருக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அடுத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்  அடுத்த 3 ஆண்டுகளுக்குள் “அவர் எந்தக் குற்றமும் செய்யாவிட்டால் அவரது தண்டனையை இரண்டு ஆண்டுகள் மற்றும் பத்து மாதங்கள் குறைக்க முடியும்.
பெண்கள் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோது, ஹத்லூல் உள்ளூர் அதிகாரிகளால்  கைதுசெய்யப்பட்டார்.  சவூதி பெண்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் வரலாற்று தீர்ப்பை சவுதி நீதிமன்றம் வழங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர் கைது செய்யப்பட்டார்.


SHARE

Related posts

Leave a Comment