பசு பாதுகாப்புக்கென தனி அமைச்சகம்-சிவராஜ்சிங் சவுகான்

SHARE

மத்திய பிரதேசத்தில் பசுக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காக பசு பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் பசுக்களின் பாதுகாப்பிற்காக தனியாக அமைச்சகம் உருவாக்கப்பட உள்ளது. அந்த அமைச்சகத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு, வனம் மற்றும் உழவர் நலத்துறை ஆகியவை செயல்படும். இதற்கான முதல் கூட்டம் வரும் 22ல் அகர்மால்வாவில் நடக்கும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment