ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்

SHARE

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 31 வயதான பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக பிரசவம் நடைபெற்றது. அதில், இரண்டு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள் மற்றும் 3 ஆண் குழந்தைகள் என 6 குழந்தைகள் பிறந்தன.
குழந்தைகளின் எடைகளில் அதிகபட்சமாக 1.6 கிலோகிராம் எடைக்கொண்ட குழந்தையும், குறைந்தபட்சமாக 870 கிராம் எடைக்கொண்ட குழந்தையும் உள்ளது. தற்போது தாயும், ஆறு குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறப்பது இதுவே முதன்முறையாகும்.


SHARE

Related posts

Leave a Comment