கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட கொரொனாவால் பாதிக்கப்பட்ட 88 பேரின் மாதிரிகளில், 84 பேருக்கு டெல்டா வைரஸ் திரிபு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை மருத்துவர் சந்திம ஜீவந்தர இந்த தகவலை தெரிவித்தார்.
இலங்கையில் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக, தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 117 டெல்டா தொற்று கண்டறியப்பட்டது.
மாத்தளை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, வவுனியா, மஹரகம, மாலபே மற்றும் கம்பஹாவைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு டெல்டா தொற்றியுள்ளது.
இலங்கையில் மூன்று வகையான கொரோனா வைரஸ் பரவி வருவது சமீபத்தில் கண்டறியப்பட்டது.
மேலும், மூன்று பிறழ்வுகள் ஒரே நேரத்தில் அடையாளம் காணப்படுவது உலகில் இதுவே முதல் முறை என்றும் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
இந்த டெல்டா வகை கொழும்பு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இது ஒரு புதிய வகையாக உருவாக வாய்ப்புள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.