அமெரிக்க தேர்தல் – வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.

SHARE

அமெரிக்க தேர்தல் முடிவுகள் எப்போது வெளிவரும் என்ற எதிர்பார்ப்புகள் உலகம் முழுவதும் உள்ளது. 

அமெரிக்காவில் மத்திய அரசை விட மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் உள்ளது. இதனால், வாக்களிக்கும் முறை  மாகாணங்களுக்கு மாகாணங்கள் வேறுபடுகிறது.  
அமெரிக்காவில் வரலாறு காணாத அளவுக்கு தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதும் தாமதத்திற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் மொத்த வாக்காளர்கள் 15 கோடி. இதில்  தபால் வாக்குகள் மட்டும் கிட்டத்தட்ட 10 கோடி பதிவாகியுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக இந்த தேர்தலில் அதிக அளவு தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.
எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதில் மாகாணத்திற்கு மாகாணம் விதிகள்  வேறுபடுகிறது.  நம் நாட்டில் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் ஒருங்கிணைக்கிறது. ஆனால், அமெரிக்காவில் மாகாண அரசுகளுக்கே அதிக அதிகாரம் உள்ளது. எப்படி தேர்தல் நடத்துவது, எப்படி முடிவுகளை வெளியிடுவது வாக்கு எண்ணிக்கை போன்றவற்றில் மாகாண அரசுகளுக்கு தனி அதிகாரம் உள்ளது.

அமெரிக்காவில் உள்ள எல்லா மாகாணங்களிலும் சட்டங்கள் வெவ்வேறாக உள்ளன. எனவே மாகாண  அரசு அளிக்கும் போது மட்டுமே முடிவு  தெரியவரும். 
தற்போது டிரம்ப் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால்,முடிவுகள் தெரிய வர எத்தனை நாட்கள் ஆகும் என்பதை கணிக்க முடியாது. கடந்த 2000 ஆம் ஆண்டில்  தேர்தல் ரீதியாக  பிரச்சினை வந்த போது அதிபர் யார்? என்று தெரிவதற்கு ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. அதே நிலையை நோக்கியே தற்போதைய நிலையும் உள்ளது. . இதனால், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் முழுமையாக தெரியவர சில வாரங்களும் ஆகலாம். மாதங்களும் ஆகலாம் என தெரிகிறது. 


SHARE

Related posts

Leave a Comment