ஜூலை 12 ல், ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழகம், கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்ததாகக் கூறியது, இது அரசால் இயங்கும் இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி அமைப்பு உருவாக்கியது.
தடுப்பூசி அடுத்த மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று நம்புவதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் தனியார் நிறுவனங்கள் பெருமளவில் உற்பத்தியைத் தொடங்கலாம் என்றும் பல்கலைகழக பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.