மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்து கொண்டதாகவும் இந்த பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அமித்ஷா அரியானா மாநிலம்,குருகிராம் நகரில் உள்ள மேதன்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக ஆளுநர் தனது இல்லத்திலேயே தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.