அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல்: மகுடம் சூடப்போவது டிரம்பா? ஜோ பிடனா?

SHARE

அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் போட்டிக்கான களத்தில் உள்ளார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸ் போட்டியிடுகிறார். குடியரசுக்கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிடுகிறார்.

அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்த நிலையில் வெற்றி தோல்வி பற்றி கருத்து கணிப்பு நடத்தாமல் ட்ரம்பை கவிழ்த்தும் விதமாக ஒரு கருத்து கணிப்பு மற்றும் ஆய்வு ஒன்றை ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் நடத்தியது. இதில்,டிரம்ப் தேர்தல் பிரசாரம் செய்த 18 இடங்களிலில், கூட்டத்தில் பங்கேற்ற 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 700 பேர் பலியாகியிருக்கலாம் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுது முழுக்க முழுக்க எதிர்கட்சிகளின் கடைசி நேர சதி என ட்ரம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் முன்கூட்டியே வாக்களிக்கலாம் என்ற விதிமுறை உள்ளதால், சுமார் 9 கோடி பேர் நேற்றுவரை வாக்களித்து விட்டனர். அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இதுவரை இப்படி ஆர்வமாக வந்து வாக்களித்தது இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், நாளை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளன. வாக்குப்பதிவு முடிந்ததும், முதலில் நேரில் வாக்களித்தவர்களின் வாக்குகள் எண்ணப்படும்.

அதன்பிறகு தபால் வாக்குகள், முன்கூட்டியே வாக்களித்தவர்களின் ஓட்டுகள் எண்ணப்படும். இம்முறை ஏராளமானோர் முன்கூட்டியே வாக்களித்துள்ளதால், தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதிபர் பதவியில் அமர்ந்து மகுடம் சூடப்போவது யார்? என்பது இன்னும் ஒரு நாளில் தெரிந்து விடும். அமெரிக்காவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை எட்டப்போகிறது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


SHARE

Related posts

Leave a Comment