அமெரிக்க துணை அதிபர் பதவி- இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டி

SHARE

அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ள வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில், ஜோ பிடன் இருமாதங்களாக ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜோ பிடன் அறிவித்தார். துணை அதிபர் பதவிக்கு வேட்பாளராக கமலா ஹாரீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


கமலா ஹாரீஸின் பெற்றோர் அமெரிக்காவில் குடியேறியவர்கள் . அவரது தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். தாயார் இந்தியர் .  கலிபோர்னியா மாகாணத்தில் அட்டார்னி ஜெனராலாக தேர்வு செய்யப்பட்ட முதல் கறுப்பின பெண் கமலா ஹாரீஸ்.  அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் தென் ஆசிய  பாரம்பரியத்தை கொண்ட முதல் பெண் என்ற பெருமையையும் கமலா ஹாரீஸ் பெற்றுள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment