அ.தி.மு.க., தொண்டர்களை எம்.ஜி.ஆரும்., ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்” – சசிகலா

SHARE

அ.தி.மு.க., தொண்டர்களை எம்.ஜி.ஆரும்., ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்” என சசிகலா கூறினார்.

சட்டசபை தேர்தலின் போது, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடைந்தாலும், பிரதான எதிர்க்கட்சியானது. அ.ம.மு.க., ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்தது. அதன்பின், அமைதியாக இருந்த சசிகலா, ஜூலை மாதத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் போனில் பேசி வந்தார்.
விரைவில், அரசியலுக்கு வர உள்ளதாக தெரிவித்தார். ஆனால், அவருடன் பேசியவர்கள் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டனர். அதனால், சசிகலாவுடன் பேச பயந்தனர்.அடுத்த கட்டமாக அவர் பேசும் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். கொரோனா குறைந்ததும், கட்சியினரை நேரில் சந்திக்க போவதாக தெரிவித்திருந்தார்.


அதன்படி, இன்று(16ம் தேதி) சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிக்கலா.ஜெயலலிதா நினைவிடத்திற்கு நான் ஏன் தாமதமாக வந்தேன் என்பது மக்களுக்கும் தொண்டர்களுக்கும் தெரியும். 5 ஆண்டுகளாக மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா முன் இறக்கி வைத்துவிட்டேன். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், மக்களுக்காகவும், தொண்டர்களுக்காகவும் வாழ்ந்தவர்கள். இருவரும் அ.தி.மு.க.,வையும் தொண்டர்களையும் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன் என்றார்‘


SHARE

Related posts

Leave a Comment