அ.ம.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., 60 தொகுதிகளில் போட்டி

SHARE

அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க.,வுக்கு போதுமான தொகுதிகள் ஒதுக்கப்பட வில்லை . இதனையடுத்து அந்த கூட்டணியில் இருந்து பிரிந்தது. தொடர்ந்து தினகரனின் அ.ம.மு.க.,வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில் ஏற்பட்ட உடன்பாட்டின் படி 60 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

கும்மிடிப்பூண்டி, திருத்தணி, ஆவடி, வில்லிவாக்கம், திரு.வி.க., நகர், எழும்பர், விருகம்பாக்கம், செங்கம்,கலசப்பாக்கம் , ஆரணி, சோழிங்கநல்லூர், பல்லாவரம்,ஊத்தங்கரை ,வேப்பனஹள்ளி, பாலக்கோடு , பென்னாகரம், நிலக்கோட்டை,மணப்பாறை,திருவெறும்பூர்,கரூர்,முசிறி, கிருஷ்ணராயபுரம், பெரம்பலூர், விருத்தாச்சலம், பண்ருட்டி, கடலூர், திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர், கீழ்வேளூர், திட்டக்குடி,செய்யூர், மதுராந்தகம், கே.வி.குப்பம், பேராவூரணி, புதுக்கோட்டை, சோழவந்தான், மதுரை மேற்கு, அருப்புக்கோட்டை, பரமக்குடி, தூத்துக்குடி , ஒட்டப்பிடாரம், ஆலங்குளம், ராதாபுரம், குளச்சல், விளவங்கோடு, மயிலம் உள்ளிட்ட 60 தொகுதிகளில் போட்டியிடுவது என ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

மேற்கண்ட தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்தத் தொகுதிகளில் அறிவிக்கப்பட்ட அமமுக வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படுவார்கள்என அமமுக அறிவித்துள்ளது.


SHARE

Related posts

Leave a Comment