ஆகஸ்ட் 5ல் ராமர் கோயில் அடிக்கல்… முதலமைச்சர்களுக்கு மோடி அழைப்பு

SHARE

இந்தியாவின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாக இருந்த ராமஜென்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அயோத்தியில் கோயில் கட்டுவதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவந்தன.

இந்தநிலையில், வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி வைக்க பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு 150 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது இந்தியாவின் அனைத்து மாநில முதல அமைச்சர்களையும் விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அடிக்கல் நாட்டுவதற்கு முன்னர், ராமர் மற்றும் ஹனுமன் கோயில்களில் மோடி பிரார்த்தனை செய்ய உள்ளார் என ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அமைப்பு தெரிவித்துள்ளது


SHARE

Related posts

Leave a Comment