ஆந்திராவில் 7,000 -கர்நாடகாவில் 5000.

SHARE

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில்,வீட்டை விட்டு வெளியே வந்த பொதுமக்கள் கொடூரமான முறையில் போலீஸ் தாக்குதலுக்கு ஆளாகினர்.

ஆனால்,சில நாட்களுக்கு முன்னர் அரசே அனைத்தையும் திறந்து விட்டது. விளைவு நோய் பாதிப்பு அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

இன்று மட்டும் கர்நாடக மாநிலத்தில் 5030 பேர், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பெங்களூருவில் மட்டும் அதிகபட்சமாக 2,207 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய அறிவிப்பில் மேலும் 97 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,616 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,998 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 72,711 ஆக அதிகரித்துள்ளது.


SHARE

Related posts

Leave a Comment