ஆன்லைனில் அண்ணாமலையார்.

SHARE


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலம் ஆகும். நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலம் என்று போற்றப்படும் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல திருவிழாக்கள் நடைபெறும்.. அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவிலுக்கு சிவாச்சாரியார்கள் சென்று வழக்கமான வழிபாடுகளை செய்து வருகின்றனர்.


இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை விநாயகர் வழிபாடு, யாகசாலை பூஜை நடைபெற்றது. அம்மன் சன்னதியில் நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது.
விழா நிகழ்ச்சிகளை ஆன்லைனில் ஒளிபரப்ப கோவில் அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

ஆள்லைனில் விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE

Related posts

Leave a Comment