ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறியதை அடுத்து அங்கு அரசு படையினருக்கும் தாலிபான்களுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்துள்ளன.
ஜூன் 3, 4 ஆகிய இரு நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் நடந்த மோதல்களில் பாதுகாப்புப் படையினர் 102 பேர் உட்பட 119 பேர் உயிரிழந்ததாகவும், ராணுவ வீரர்கள் 196 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 3ஆம் நாளில் நிகழ்ந்த மோதல்களில் தாலிபான்கள் 183 பேரும், ஜூன் நான்காம் நாள் நிகழ்ந்த மோதல்களில் தாலிபான்கள் 181 பேரும் உயிரிழந்ததாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் 24 முதல் 27 மாகாணங்களில் மோதல்கள் நடக்கின்றன. பாதுகாப்புப் படைகளின் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.